Last Updated: July 26, 2026
1. அறிமுகம் மற்றும் நிறுவனத்தின் தன்மை (Introduction & Legal Status)
1.1. நிறுவனத்தின் தன்மை: WYN Pay என்பது ஒரு லாப நோக்கம் கொண்ட, சுயசார்பு நிதிச் சேவை மற்றும் மேலாண்மை நிறுவனமாகும் (Service Enterprise). இது எந்தவொரு இலவச சேவை நிறுவனமோ அல்லது அறக்கட்டளையோ அல்ல. WYN Pay நிறுவனம் இந்திய அரசின் 'உத்யம்' (Udyam) பதிவு பெற்று, முறையாக அங்கீகரிக்கப்பட்ட வணிகமாகச் செயல்படுகிறது. எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது வணிக ரீதியிலான ஒப்பந்தங்களுக்கு உட்பட்டது.
1.2. சேவை விளக்கம்:
WYN Pay தனது வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குகிறது:
நிதி வசதி (Credit Facility): தகுதியான மற்றும் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருப்பிச் செலுத்தும் நிபந்தனையின் அடிப்படையில் நிதி வசதி (Credit Facility) வழங்கப்படுகிறது.
சேவைக் கட்டணம் (Service Charges): WYN Pay ஒரு சேவை நிறுவனம் என்பதால், வழங்கப்படும் நிதி வசதி மற்றும் மேலாண்மைச் சேவைகளுக்காக (Management Services), நிறுவனத்தால் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட சேவைக் கட்டணம் (Service Fee) வசூலிக்கப்படும்.
பரிவர்த்தனை மேலாண்மை (Transaction Management): வாடிக்கையாளர்களின் கணக்குகள், பெறப்பட்ட நிதி, திருப்பிச் செலுத்தும் காலக்கெடு மற்றும் நிலுவைத் தொகைகளை WYN Pay முறையாகப் பதிவு செய்து நிர்வகிக்கிறது.
நினைவூட்டல் மற்றும் கணக்கு அறிக்கை (Payment Reminders & Account Statements): வாடிக்கையாளர்கள் தங்களின் தவணை அல்லது நிலுவைத் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்த, முறையான நினைவூட்டல் தகவல்கள் வழங்கப்படும். மேலும், வாடிக்கையாளர்களின் கணக்கு அறிக்கைகள் (Account Statements) PDF வடிவில் WhatsApp மூலம் அனுப்பி வைக்கப்படும்.
2. வாடிக்கையாளர்களின் தகுதிகள் மற்றும் சேர்க்கை (Customer Eligibility & Registration)
WYN Pay-வில் இணைய எவ்வித சேர்க்கைக் கட்டணமும் கிடையாது. எனினும், கணக்குத் தொடங்கப் பின்வரும் தகுதிகளும் ஆவணங்களும் கட்டாயமாகும்:
2.1. 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் (Adult Customers):
அடையாளச் சான்று (ID Proof):
ஆதார் அட்டை - [Aadhaar Redacted]) நகல்
பான் கார்டு (PAN Card)
வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook)
கைபேசி எண் (Mobile Number) / (வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட (Bank Linked Mobile Number) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) வசதி கொண்ட எண்ணாக இருக்க வேண்டும்.)
2.2. ஆதார் நகல் சமர்ப்பித்தல் குறித்த நிர்வாகக் கொள்கை (Policy on Aadhaar Submission):
விண்ணப்பதாரரின் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று (ஆதார் அட்டை - [Aadhaar Redacted]) நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
(பாதுகாப்புக் காரணங்களுக்காக, விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களை மறைத்து, கடைசி 4 இலக்கங்கள் மட்டும் தெரியும் வகையில் உள்ள 'மறைக்கப்பட்ட ஆதார்' (Masked Aadhaar) நகலை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.)
முழு ஆதார் சமர்ப்பிக்கப்பட்டால்: ஒரு விண்ணப்பதாரர் தவறுதலாகவோ அல்லது கவனக்குறைவாகவோ முழு ஆதார் எண்ணுடன் கூடிய நகலைச் சமர்ப்பித்தால், நிர்வாகம் அத்தகைய ஆவணத்தை வாடிக்கையாளரின் தனியுரிமையைக் காக்கும் பொருட்டு நிராகரிக்கும் அல்லது தணிக்கை (Redact/Mask) செய்யும்.
3. நிதி வசதி மற்றும் சேவை கட்டணம் (Credit Facility and Service Charges)
WYN Pay வழங்கும் நிதிச் சேவையைப் பயன்படுத்துவதில் உள்ள நிபந்தனைகள் பின்வருமாறு:
3.1. நிதி வசதி (Credit Facility): தகுதியான வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் பரிவர்த்தனை வரலாறு மற்றும் தகுதியின் அடிப்படையில் நிதி வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதிக்கான வரம்பு மற்றும் நிபந்தனைகளை முடிவு செய்யும் உரிமை WYN Pay நிறுவனத்திற்கு மட்டுமே உண்டு.
3.2. சேவைக் கட்டணம் (Service Charges): நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிதி வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வடிக்கையாளர்க்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வரம்பு (Credit Limit) எப்போதும் தயார் நிலையில் (Ready-to-use) வைக்கப்பட்டுள்ளது.
இந்த தயார்நிலையில் உள்ள நிதி வசதி (Ready-to-use), உங்கள் நிதித் தேவைகளை உடனடித் தீர்வு காணும் டிஜிட்டல் தளம் (Digital Platform), இதற்கான தொழில்நுட்ப மேலாண்மை (Technical Management), மற்றும் உங்கள் கணக்கைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் நிர்வாகப் பணிகள் (Administrative Services) ஆகியவற்றுக்காகவே இந்த வாராந்திரச் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
WYN Pay நிறுவனம் நிதி வசதிக்கான அணுகல் (Credit Access) மற்றும் டிஜிட்டல் மேலாண்மைச் சேவைகளுக்காக (Digital Service Fee) வாராந்திர கட்டணமாக ₹20 வசூலிக்கிறது.
இந்தச் சேவை கட்டணமானது, வாடிக்கையாளர் பெற்ற நிதி வசதித் தொகையை (Credit Facility Amount) முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை வாரந்தோறும் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.
விளக்கம்: வாடிக்கையாளர் தான் பெற்ற நிதி வசதித் தொகையை எந்த வாரம் முழுமையாகத் திருப்பிச் செலுத்துகிறாரோ, அந்த வாரம் வரை மட்டுமே இந்தக் கட்டணம் பொருந்தும்.
உதாரணம்: நீங்கள் ₹2,000 நிதி வசதி பெறுகிறீர்கள் எனில், அதனை முதல் வாரத்திற்குள்ளேயே திருப்பிச் செலுத்திவிட்டால், அந்த வாரத்திற்கான கட்டணம் ₹20 மட்டுமே. அதன்பின் எந்தக் கட்டணங்களும் வசூலிக்கப்படமாட்டாது.
3.3. பரிவர்த்தனை வெளிப்படைத்தன்மை: ஒவ்வொரு வாடிக்கையாளரின் Credit தொகை பரிவர்த்தனை விவரங்களும், நிறுவனம் வழங்கும் கணக்கு அறிக்கையில் (Account Statement) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
3.4. திருப்பிச் செலுத்தும் காலக்கெடு (Repayment Tenure): வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதி வசதியை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
3.5. நிதி இருப்பு: நிதி வசதி (Credit Amount) வழங்குவது என்பது, அந்தந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் வசம் உள்ள நிதி இருப்பு (Fund Availability) மற்றும் பணப்புழக்கத்தைப் பொறுத்தே அமையும்.
3.6. விதிமுறைகளுக்கு உட்பட்டது: நிதி வசதி கோரிக்கைகள் அனைத்தும், நிறுவனத்தின் தற்போதைய செயல்பாட்டு விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டே பரிசீலிக்கப்படும். முன்னறிவிப்பின்றி விதிமுறைகளில் மாற்றங்கள் செய்வதற்கான முழு அதிகாரமும் நிறுவனத்திடம் உள்ளது.
4.1. படிநிலை நிதி வரம்பு முறை (Tiered Credit Limit System): WYN Pay நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை மற்றும் நிதி வசதியைத் திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டே நிதி வரம்பு (Credit Limit) நிர்ணயிக்கப்படுகிறது.
4.2. ஆரம்பக்கட்ட நிதி வரம்பு (Initial Credit Limit): புதிய வாடிக்கையாளர்கள் அனைவரும் முதலில் அதிகபட்சமாக ₹500 வரை மட்டுமே நிதி வசதி பெற முடியும். வாடிக்கையாளர் இந்த முதல் நிதி தொகையைச் சரியான நேரத்தில் முழுமையாகத் திருப்பிச் செலுத்திய பிறகு மட்டுமே, அடுத்தகட்ட உயர் நிதி வரம்பிற்குத் தகுதியுடையவர் ஆவார்.
4.3. வரம்பு உயர்வு (Limit Progression): முதல் நிதி வசதி முறை வெற்றிகரமாக முடிவடைந்த பிறகு, வாடிக்கையாளரின் செயல்பாட்டைப் பொறுத்து நிதி வரம்பு படிப்படியாக ₹5000 வரை உயர்த்தப்படும்.
4.4. அதிகபட்ச வரம்பு (Maximum Limit - ₹5,000): நிதி வசதியைப் பயன்படுத்தி சரியாக சேவைக் கட்டணம் செலுத்தப்படும் ஒவ்வொரு 5 வாரங்களுக்கும் வாடிக்கையாளரின் நிதி வரம்பு ₹1,000 என உயர்த்தப்படும். இந்த நடைமுறை அதிகபட்சமாக ₹5,000 வரை தொடரும். மேலும், நிறுவனத்தின் நிதி இருப்பு நிலையைப் பொறுத்து இந்த வரம்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.
4.5. நிர்வாகத்தின் முடிவு (Management Decision): நிதி வரம்பை உயர்த்துவது அல்லது வாடிக்கையாளரின் தகுதியை நிர்ணயிப்பது தொடர்பான இறுதி முடிவை WYN Pay நிர்வாகமே எடுக்கும். இந்த முடிவுகள் வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்பட்டதாகும்.
5.1. நிதி ஒதுக்கீடு: ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப ₹500 முதல் ₹5,000 வரை நிதி வசதி ஒதுக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சமயங்களில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதி வரம்பிற்குள் (Credit Limit) நிதி வசதியை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5.2. சேவை கட்டண முறை: வாடிக்கையாளர்கள் தங்களின் Credit Limit (₹500 முதல் ₹5,000 வரை) வரம்பிற்குள் எவ்வளவு நிதி வசதியைப் பயன்படுத்தினாலும், வாராந்திர சேவை கட்டணமாக ₹20 மட்டுமே வசூலிக்கப்படும்.
உதாரணம்: நீங்கள் ₹500 பெற்றாலும் சரி, ₹5,000 பெற்றாலும் சரி, வாராந்திர சேவை கட்டணம் ₹20 மட்டுமே.
5.3. கட்டணக் கால அளவு: இந்த வாராந்திர சேவை கட்டணமானது, வாடிக்கையாளர் பயன்படுத்திய நிதி வசதித் தொகையை (Credit Amount) முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வாரம் வரை மட்டுமே கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும். நிதி வசதித் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியவுடன், அதன்பின் எவ்விதக் கட்டணங்களும் வசூலிக்கப்படமாட்டாது.
6.1. வரம்பு மறுசீரமைப்பு (Credit Limit Re-adjustment): வாடிக்கையாளர் ஒருமுறை பெற்ற Credit Facility தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை, அவர் செலுத்தும் மாதத் தவணைகளில் (Monthly Installments) ஒரு பகுதி, மீண்டும் அவரது Available Credit Limit-இல் சேர்க்கப்படும்.
6.2. கணக்கீட்டு முறை (Calculation Logic):
ஒவ்வொரு முறை தவணைத் தொகையைச் செலுத்தும்போதும், அதில் 50% (பாதித் தொகை) அவரது Available Credit Limit-இல் தானாகவே சேர்க்கப்படும்.
இதன் மூலம், வாடிக்கையாளர் நிலுவைத் தொகையைக் (Outstanding Amount) குறைக்கக் குறைக்க, மீண்டும் நிதி வசதியைப் பெறுவதற்கான வரம்பு (Credit Limit Upgradation) அவர்களுக்கு உடனுக்குடன் அதிகரிக்கும்.
உதாரணம்:
நீங்கள் ₹5,000 நிதி வசதியைப் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நீங்கள் மாதம் ₹500 வீதம் 2 மாதங்களுக்கு தவணை செலுத்துகிறீர்கள் என்றால், மொத்தம் ₹1,000 செலுத்தியிருப்பீர்கள்.
இந்தச் செலுத்திய தவணை தொகையில் பாதியான ₹500 (₹1,000-ல் 50%), உங்கள் Available Credit Limit-இல் கூடுதலாகச் சேர்க்கப்படும். இதனை நீங்கள் தேவைப்படும்போது மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
7.1. வாராந்திர சேவை கட்டணம் (Weekly Service Charge):
கட்டணத் தொடக்கம்: நிதி வசதியைப் (Credit Facility) பெற்ற முதல் வாரத்தின் முதல் நாளிலிருந்தே (From Day 1 of Week 1), கணக்கு பராமரிப்பு, டிஜிட்டல் சேவை (Digital Service), தகவல் தொடர்பு மற்றும் நிர்வாகப் பணிகள் தொடங்கிவிடுவதால், அதற்கான வாராந்திரக் கட்டணமும் அந்த முதல் நாளிலிருந்தே கணக்கிடப்படும்.
சேவை கட்டணம் செலுத்தும் காலம் கணக்கீடு: வாடிக்கையாளர் நிதி வசதியைப் (Credit Facility) பெற்ற நாளிலிருந்து, ஒவ்வொரு 7 நாட்களும் ஒரு வாரமாகக் கணக்கிடப்படும். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும்.
ஒருவேளை புதன்கிழமை அன்று Credit தொகை பெறப்பட்டால், பெறப்பட்ட அதே தேதியில் (புதன்கிழமை) முதல் வாரத்திற்கான சேவைக் கட்டணம் செலுத்துவது அவசியமாகும். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் வாராந்திரக் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதற்கிடையில், வாரத்தின் நடுப்பகுதியில் (புதன்கிழமைக்கு முன்னதாகவே) கணக்கை முடிக்க நேர்ந்தாலும், அந்த நடப்பு வாரத்திற்கான சேவைக் கட்டணத்தைச் முழுமையாகச் செலுத்திவிட்டு கணக்கை முடிப்பது அவசியம்.
இந்தக் கட்டணமானது, நீங்கள் பயன்படுத்திய Credit தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வாரம் வரை மட்டுமே தொடரும்.
வாராந்திர அறிக்கை: ஒவ்வொரு வாரமும் நிலுவையில் உள்ள சேவை கட்டணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட கிரெடிட் விவரங்கள் (Credit Details) குறித்த அறிக்கைகள், WhatsApp மூலம் உங்களுக்குத் தொடர்ந்து அனுப்பப்படும்.
7.2. மாதாந்திர தவணை முறை (Monthly Installment):
குறைந்தபட்சத் தவணை: மாதந்தோறும் (30 நாட்களுக்கு ஒருமுறை) குறைந்தபட்சம் ₹500 செலுத்த வேண்டும்.
(அல்லது)
வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப, இந்த குறைந்தபட்சத் தொகையை விடக் கூடுதலாகவும் நிதி தொகையைச் (Credit Amount) செலுத்தலாம். இது அவர்களின் நிலுவைத் தொகை விரைவாகக் குறைத்து, சேவை கட்டணத்தை சேமிக்க உதவும்.
₹500-க்கு குறைவான தொகையானால்: வாடிக்கையாளர் பயன்படுத்திய கிரெடிட் அளவு (Used Limit) ₹500-க்கு குறைவாக இருந்தால், அந்த மீதமுள்ள முழு நிலுவைத் தொகையையும் (Full Pending Credit Amount) ஒரே தவணையில் முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
7.3. மாதாந்திர தவணை செலுத்தும் காலக்கெடு (Installment Due Date Rules)
வாடிக்கையாளர் கிரெடிட் தொையைப் பெறும் நாளின் அடிப்படையில், முதல் தவணை செலுத்த வேண்டிய தேதிக்கான விதிகள்:
மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் (1 முதல் 10 தேதி வரை): கிரெடிட் தொகையைப் பெற்றால், அடுத்த மாதம் முதல் 3 தேதிக்குள் முதல் தவணையைச் செலுத்த வேண்டும்.
உதாரணம்:
வாடிக்கையாளர் ஜனவரி 5 அன்று கிரெடிட் பெற்றால், முதல் தவணையை பிப்ரவரி 3 தேதிக்குள் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் முதல் 3 தேதிக்குள் (மார்ச் 3, ஏப்ரல் 3...) அடுத்தடுத்த தவணைகளைச் செலுத்த வேண்டும்.
மாதத்தின் 11 முதல் 31 தேதிக்குள் (11 முதல் இறுதி தேதி வரை): கிரெடிட் தொகையைப் பெற்றால், உடனடியாக வரும் அடுத்த மாதத்தைத் தவிர்த்து, அதற்கு அடுத்த மாதத்தின் முதல் 3 தேதிக்குள் முதல் தவணையைச் செலுத்த வேண்டும்.
உதாரணம்:
வாடிக்கையாளர் ஜனவரி 15 அன்று கிரெடிட் பெற்றால், உடனடியாக வரும் அடுத்த மாதமான பிப்ரவரியைத் தவிர்த்து, அதற்கு அடுத்த மாதமான மார்ச் 3 தேதிக்குள் முதல் தவணையைச் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் முதல் 3 தேதிக்குள் (ஏப்ரல் 3, மே 3...) அடுத்தடுத்த தவணைகளைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
தொடர் தவணை செலுத்தும் முறை (Subsequent Installments):
முதல் தவணைக்குப் பிறகு: முதல் தவணை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் முதல் 3 தேதிக்குள் அடுத்தடுத்த மாதாந்திரத் தவணைகளைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
காலக்கட்டம்: வாடிக்கையாளர் பயன்படுத்திய மொத்த கிரெடிட் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தி முடிக்கும் வரை இந்தத் தவணை முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
WYN Pay நிறுவனத்தின் நிதி வசதி தொடர்பான வாராந்திர சேவை கட்டணம் மற்றும் மாதந்திர தவணைத் தொகைகளைச் செலுத்துவதற்குப் பின்வரும் வசதிகள் வழங்கப்படுகின்றன:
8.1. கட்டணம் செலுத்தும் நெறிமுறை
Gpay/PhonePe/Paytm போன்ற UPI மூலம் செலுத்துதல் (Instant Pay):
உங்களுக்கு அனுப்பப்படும் வாராந்திர கணக்கு அறிக்கை அல்லது நினைவூட்டல் செய்தியுடன் 'Pay ₹20' (சேவை கட்டணத்திற்கு) அல்லது 'Pay Credit' (தவணைத் தொகைக்கு) எனும் பட்டன்கள் இணைக்கப்பட்டிருக்கும். அதைத் தொடுவதன் (Click) மூலம் நீங்கள் நேரடியாகக் கட்டணம் மற்றும் தவணையைச் செலுத்தலாம்.
(அல்லது)
WYN Pay-வால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ UPI ID-க்கு நேரடியாகப் பணத்தைச் செலுத்தலாம்.
UPI ID: wynpay@upi
முக்கிய குறிப்பு: நீங்கள் எந்த முறையில் பணம் செலுத்தினாலும், உங்கள் கணக்கில் அது உடனடியாகப் புதுப்பிக்கப்படும். பரிவர்த்தனை செய்தவுடன் உரிய உறுதிப்படுத்தல் செய்தி (Confirmation Message) உங்களுக்கு அனுப்பப்படும்.
8.2. கட்டணம் செலுத்தும் நெறிமுறைகள் (Payment Protocols)
பதிவு செய்த மொபைல் எண் கட்டாயம்: வாடிக்கையாளர்கள் தங்கள் தவணைத் தொகை மற்றும் வாராந்திர சேவை கட்டணத்தை செலுத்தும்போது, WYN Pay கணக்கில் பதிவு செய்துள்ள அதே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட UPI செயலிகளை (GPay, PhonePe, முதலியன) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிற எண்களைத் தவிர்த்தல்: வேறு மொபைல் எண்கள் அல்லது பிற நபர்களின் கணக்குகள் மூலம் செலுத்தப்படும் தொகைகள், வாடிக்கையாளரின் கணக்கில் முறையாகப் பதிவாகாது. அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்காது.
ஆட்டோ-டெபிட் (Auto-debit): ஆட்டோ-டெபிட் முறை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் வரை, வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணங்களை மேற்கண்ட முறையிலேயே கைமுறையாகச் (Manual Transfer) செலுத்த வேண்டும்.
9.1. ஆட்டோ-டெபிட் தோல்வி மற்றும் அதன் விளைவுகள் (Auto-Debit Failure Policy)
ஆட்டோ-டெபிட் (Auto-Debit) முறை செயல்பாட்டில் இருக்கும்போது, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், கீழ்க்கண்ட விதிமுறைகள் பொருந்தும்:
வங்கி அபராதக் கட்டணம்: பரிவர்த்தனை தோல்வியடையும் பட்சத்தில், வாடிக்கையாளரின் வங்கி விதிமுறைகளின்படி விதிக்கப்படும் பவுன்ஸ் கட்டணங்களுக்கு (Bounce Charges / NACH Failure Penalty) அந்தந்த வங்கியே பொறுப்பாகும். இதற்கும் WYN Pay அமைப்பிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை; மேலும் இக்கட்டணங்களுக்கு WYN Pay நிறுவனம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.
வாராந்திரக் கட்டணத் தொடர்ச்சி: ஆட்டோ-டெபிட் தோல்வியினால் குறிப்பிட்ட வாரத்திற்கான கட்டணம் வந்து சேராத பட்சத்தில், அடுத்த வாரம் தொடங்கும் முதல் நாளிலிருந்து அதற்கான வாராந்திரக் கட்டணம் (₹20) வாடிக்கையாளர் கணக்கில் தொடர்ந்து கணக்கிடப்பட்டுச் சேர்க்கப்படும்.
வாடிக்கையாளர் தகுதி பாதிப்பு: தொடர்ச்சியான ஆட்டோ-டெபிட் தோல்விகள் வாடிக்கையாளரின் மதிப்பைப் பாதிக்கும். இதன் காரணமாக, எதிர்காலத்தில் புதிய நிதி வசதி பெறுவதற்கான தகுதி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தி வைக்கப்படலாம்.
10. மோசடி தடுப்பு மற்றும் சட்ட நடவடிக்கை (Anti-Fraud and Legal Action Policy)
ஒரு வாடிக்கையாளர் திட்டமிட்டுத் தவறான தகவல்களை அளித்தோ அல்லது நிதி வசதியைப் பெற்றுவிட்டு வேண்டுமென்றே கணக்கை நிறைவு செய்யாமல் ஏமாற்ற நினைத்தாலோ, நிர்வாகம் அத்தகைய நபர்களை "நம்பகத்தன்மையற்ற வாடிக்கையாளர்களாக" (Defaulting Customers) கருதி கீழ்க்கண்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கும்:
10.1. நிரந்தரத் தடை (Blacklist): விதிமீறல்களில் ஈடுபடும் வாடிக்கையாளரின் வாடிக்கையாளர் தகுதி உடனடியாக ரத்து செய்யப்படலாம் அல்லது அவர் WYN Pay தளத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். அவர் மீண்டும் எக்காலத்திலும் WYN Pay-இன் Credit Facility சேவைகளைப் பெற முடியாது.
10.2. நேரடித் தொடர்பு மற்றும் கள ஆய்வு (Field Visit & Recovery): நிர்வாகத்தின் பிரதிநிதிகள் வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கோ அல்லது அலுவலகத்திற்கோ நேரடியாகச் சென்று கணக்கைச் சமன் செய்ய அறிவுறுத்துவார்கள். அவ்வாறு நேரில் வரும்போது ஏற்படும் நிர்வாகப் பயணச் செலவுகள் மற்றும் இதர செலவுகள் (Administrative Travel Expenses and Other Expenses) வாடிக்கையாளரின் நிலுவைத் தொகையுடன் கூடுதலாகச் சேர்க்கப்படும்.
10.3. சமூக மற்றும் சட்ட நடவடிக்கை: எமது விதிமுறைகளை மீறி, நீண்ட காலம் கணக்கை நிறைவு செய்யாமல் இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் மீது நிர்வாகம் சட்ட ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதன் அடிப்படையில், நிலுவைத் தொகையை மீட்கச் சம்பந்தப்பட்ட நபர் மீது நீதிமன்றத்தில் (Court) உரிய சட்டப்பூர்வ வழக்கு தொடரப்படும்.
10.4. கூடுதல் செலவினங்கள்: சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது ஏற்படும் நீதிமன்றச் செலவுகள், வழக்கறிஞர் கட்டணம் மற்றும் நிர்வாகப் பயணச் செலவுகள் உள்ளிட்ட இதர கூடுதல் செலவினங்கள் (Administrative Travel Expenses and Other Additional Expenses) அனைத்தும் நீதிமன்றத்தின் வாயிலாக முறைப்படி அந்த வாடிக்கையாளரிடமிருந்தே முழுமையாகப் பெறப்படும். இச்செலவுகள் அனைத்தும் அவரது மொத்த நிலுவைத் தொகையுடன் சேர்த்தே சரிக்கட்டப்படும்.
10.5. நிர்வாகத்தின் அதிகாரம்: நேரடி மீட்பு (Direct Recovery) அல்லது சமூக மற்றும் சட்ட நடவடிக்கை (Legal Action) ஆகியவற்றுள், எந்த முறையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த முழு அதிகாரம் நிர்வாகத்திடமே உள்ளது.
முக்கியக் குறிப்பு:
மேற்கூறிய கடுமையான ஒழுங்குமுறை மற்றும் சட்ட நடவடிக்கைகள், 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து தனிநபர் வாடிக்கையாளர்களுக்கும் இந்த விதிகள் நேரடியாகப் பொருந்தும்.
11. WYN Pay - தனியுரிமைக் கொள்கை (Privacy Policy)
11.1. தரவுச் சேகரிப்பு (Data Collection): எங்கள் சேவைகளை வழங்குவதற்குத் தேவையான அத்தியாவசியத் தகவல்களை மட்டுமே நாங்கள் சேகரிக்கிறோம். இதில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று (ஆதார் - [Aadhaar Redacted]), பான் கார்டு (PAN Card), பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் வங்கி விவரங்கள் ஆகியவை அடங்கும்.
11.2. நோக்கங்கள் (Purpose): நாங்கள் சேகரிக்கும் தகவல்கள், உங்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதற்கும், நிதிப் பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பதற்கும் மற்றும் சட்டப்பூர்வமான விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
11.3. தரவுப் பாதுகாப்பு (Data Security): உங்கள் தகவல்கள் மிக உயர்ந்த பாதுகாப்புடன் (Encryption) சேமிக்கப்படுகின்றன. உங்கள் தகவல்கள் எக்காரணம் கொண்டும் மூன்றாவது நபர்களுக்கோ அல்லது விளம்பர நிறுவனங்களுக்கோ விற்கப்படவோ அல்லது பகிரப்படவோ மாட்டாது. ஒருவேளை எதிர்பாராத விதமாகத் தரவுப் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உடனடியாகத் தகவல் தெரிவிப்போம்.
11.4. குக்கீகள் (Cookies): எங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும்போது, உங்கள் அனுபவத்தை மேம்படுத்தவும், இணையதளத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தக் குக்கீகளைப் பயன்படுத்த நீங்கள் சம்மதிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
11.5. மூன்றாம் தரப்பு இணைப்புகள் (Third-Party Links): எங்கள் இணையதளத்தில் பிற வெளித்தளங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம். அந்த இணையதளங்களின் தனியுரிமைக் கொள்கைக்கோ அல்லது அதில் உள்ள உள்ளடக்கங்களுக்கோ (Content) நாங்கள் பொறுப்பல்ல.
11.6. சட்டப்பூர்வ வெளிப்படுத்தல் (Legal Disclosure): சட்டம், ஒழுங்குமுறை அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி, எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அல்லது பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவைப்பட்டால், உங்கள் தகவல்களை அரசு அதிகாரிகளிடம் வழங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
11.7. தரவு நீக்கம் (Data Deletion): வாடிக்கையாளர் தனது கணக்கை நிரந்தரமாக நீக்க விரும்பினால், சட்டப்பூர்வமாகத் தரவுகளை வைத்திருக்க வேண்டிய காலக்கெடு முடிந்த பிறகு, கோரிக்கையின் பேரில் அவரது தரவுகள் நீக்கப்படும்.
12. வாடிக்கையாளர் உறுதிமொழி (Customer Declaration)
"வாடிக்கையாளர் கணக்கைத் தொடங்க நான் அளித்துள்ள அனைத்து தகவல்களும் உண்மையானவை என்றும், இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் உடனடியாக நிர்வாகத்திற்குத் தெரிவிப்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.
WYN Pay நிறுவனத்தின் அனைத்து விதிகள் மற்றும் நிபந்தனைகளை (Terms & Conditions) நான் முழுமையாகக் கேட்டு/வாசித்துப் புரிந்துகொண்டேன். நான் சமர்ப்பிக்கும் அனைத்துத் தகவல்களும் உண்மையானவை என்றும், அவை தவறானவை எனத் தெரியவரும் பட்சத்தில் எனது வாடிக்கையாளர் தகுதி ரத்து செய்யப்படுவதை நான் அறிவேன்.
அரசு மற்றும் நிர்வாகத்தின் தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்றின் 'மறைக்கப்பட்ட ஆதார்' ([Aadhaar Redacted] copy) நகல், பான் கார்டு (PAN card) மற்றும் வங்கி பாஸ்புக் (bank passbook) ஆகியவற்றை மட்டுமே சமர்ப்பிப்பதை நான் உறுதி செய்கிறேன்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள நிதி வசதி (Credit Facility) எனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பெறப்பட்டது. நான் பெற்ற நிதி வசதியை குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த வசதியை முறையாகப் பராமரிப்பதற்கான வாராந்திர சேவைக் கட்டணத்தை (₹20) நான் மனப்பூர்வமாகச் செலுத்துகிறேன்.
- WYN Pay நிர்வாகம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அல்லது ஏதேனும் சந்தேகங்களுக்கு, எங்களது நிர்வாகத்தைத் தொடர்புகொள்ளவும்:
Phone: +91 915 007 1515
Email: mail@wynpay.in
Business Hours: Open all days, 9:00 AM - 6:00 PM